Saturday, 18 August 2012

பூமணி

பூமணி   இயற்பெயர் - P.மாணிக்கவாசகம். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய சிறந்த எழுத்தாளர். பூமணி, கூட்டுறவுத் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி.கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971 ல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி.க.சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார்.



பூமணி அவர்களின் படைப்புகள் :


சிறுகதைத் தொகுப்பு

  • வயிறுகள்.
  • ரீதி.
  • நொறுங்கல்கள்.

நாவல்

  • வெக்கை.
  • நைவேத்தியம்.
  • வரப்புகள்.
  • வாய்க்கால்.
  • ‘’பிறகு’’.

திரைப்படம்

  • கருவேலம்பூக்கள்.

சிறப்புகள்

  • இலக்கியச் சிந்தனை பரிசு, அக்னி விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
  • தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது.
  • வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
  • இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது பூமணிக்கு வழங்கப்பட்டது

நன்றி தமிழ் விக்கிபீடியா

No comments:

Post a Comment